ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! |
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட டிஏ.அருள்பதி மீண்டும் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஞானவேல்ராஜா தோல்வியை தழுவினார்.
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க தேர்தல்களை அடுத்து, தமிழ் திரையுலகம் பரபரப்பாக எதிர்பார்த்த சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கான தேர்தல் 24.12.17 அன்று நடந்தது.
நடிகர் சங்கத்தையும், தயாரிப்பாளர் சங்கத்தையும் கைபற்றிய விஷால் அணி, விநியோகஸ்தர் சங்கத்திலும் கால் பதிக்க நினைத்தது. தயாரிப்பாளர் சங்க செயலாளராக இருந்த ஞானவேல்ராஜா, அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.
தேர்தலில் ஓட்டுரிமை உள்ள 524 பேரில் 469 பேர் ஓட்டளித்தனர். இதில் தற்போதைய தலைவராக இருக்கும் அருள்பதி 248 ஓட்டுகளும், ஞானவேல்ராஜாவிற்கு 194 ஓட்டுகளும் கிடைத்தன. இதன்மூலம் 54 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அருள்பதி.
துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி சீனிவாசலு 216 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கே ராஜன் 199 ஓட்டுகள் பெற்றார்.
செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட மெட்ரோ ஜெயக்குமார் 169 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நேசமணி 142 ஓட்டுகளும், கலைப்புலி சேகரன் 140 ஓட்டுகளும் பெற்றனர்.
இணைச் செயலரளர் பதவிக்கு ஸ்ரீ ராம் 212 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜகோபாலன் 173 ஓட்டுகள் பெற்றார்.
பொருளாளர் பொறுப்புக்கு பாபுராவ் 201 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சித்திக் 142 ஓட்டுகள் பெற்றார்.
இந்த தேர்தலில் இணைச் செயலாளர் பொறுப்பைத் தவிர்த்து, அனைத்து பொறுப்புக்களுக்கும் அருள்பதி தரப்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.