விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
லைட்மேன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் பணியாற்றும் லைட்மேன்களின் வாழ்வியலை சொன்னவர் ஜி.வெங்கடேஷ் குமார். தற்போது, அவர் இயக்கி உள்ள படம் நீலம். இதில் ஸ்ரீ, பவித்ரா, ஜெகன், விஜயகுமார் நடித்துள்ளனர். புளூ வேவ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வெங்கடேஷ்குமாரே தயாரித்துள்ளார்.
இந்தப் படம் இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் போது நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவானது. இந்தப் படம் இந்திய அரசுக்கு ஏதிரான கருத்துக்களை கொண்டிருப்பதாக கூறி தணிக்கை குழு சான்றிதழ் தர மறுத்து விட்டது. இதனால் படத்தை டிரிபியூனலுக்கு அனுப்பி உள்ளார்.
இந்த நிலையில் இயக்குனர் வெங்கடேஷ் குமாருக்கு ரஷ்ய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது. கலை மற்றும் கலாச்சாரத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.