ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜே.ஜெயக்குமார் தயாரிக்கும் படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா கதையின் முக்கிய நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார். அதர்வா, ராஷி கண்ணா நடிக்கிறார்கள். டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.
தற்போது இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு நயன்தராவுடன் நடிக்கிறார் விஜய் சேதுபதி. நேற்று நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவிலும், ஹிப் ஆப் தமிழா ஆதி இசையிலும் உருவாகி வரும் இந்தப் படம் அடுத்த மாதம் வெளிவருகிறது.