மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஆளும்கட்சியை கடுமையாக விமர்சித்து, அரசியல் இயக்கம் காண துடித்துக் கொண்டிருக்கும் நடிகர் கமலை, ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்துக்கு சில நாட்களாவது செல்லுமாறு, அவருக்கு அரசியல் ஆலோசனைகள் வழங்கும் அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, இடைத்தேர்தலுக்கு முன், ஓரிரு நாட்கள் ஆர்.கே.நகர் தொகுதிக்குச் சென்று, அங்குள்ள மக்களோடு மக்களாக கலந்து பேசிவிட்டு வரலாம் என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மக்களோடு மக்களாக இருந்து, மக்களை சந்திக்கும் கமல், அவர்கள் உணர்வுகளை உள் வாங்கிக் கொண்டு, அவர்களை, நல்லவர்களுக்கு ஓட்டளிக்க சொல்லலாம் என தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. கூடவே, ஆளும்கட்சியின் தவறுகளை நேரடியாக மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி, இதையெல்லாம் மனதில் வைத்து நல்லவர்களுக்கு ஓட்டளித்து, அவர்களை உங்களுக்கான பிரதிநிதியாக தேர்ந்தெடுங்கள் என கூறப்போவதாக தகவல்.