மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சூர்யா படங்களுக்கு தெலுங்கில் நல்லதொரு வரவேற்பு இருந்து வரும் நிலையில், கார்த்தி சமீபத்தில் நடித்த சில படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. அந்த வகையில், நாகார்ஜூனாவுடன் இணைந்து அவர் நடித்த ஊபிரி படம் வெற்றி பெற்றது. அந்த படம் தமிழில் தோழா என்ற பெயரில் வெளியானது. ஆனால் அது தெலுங்கு படமாகி விட்டது.
அதன்பிறகு தமிழில் கார்த்தி நடித்த காஷ்மோரா, காற்று வெளியிடை ஆகிய படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகின. ஆனால் பாக்ஸ் ஆபீசில் அந்த படங்கள் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில், தற்போது, கார்த்தி நடித்து, வெளியாகியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று படம் தெலுங்கில் காக்கி என்ற பெயரில் வெளியாகி, நல்ல வசூலை கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக, காக்கி படம் ஏ செண்டர்களை விட பி அண்ட் சி செண்டர்களில் பெரிய அளவில் வசூலித்துள்ளதாம்.