விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
ஆர்யா நடிப்பில் வெளியான சமீபத்திய படங்கள் எல்லாம் தோல்வியை தழுவின. அவர் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த கடம்பன் படமும் ஏமாற்றத்தையே தந்தது. இந்நிலையில், அடுத்தப்படியாக ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
ஹர ஹர மஹாதேவகியை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டுகுத்து படத்தை இயக்கும் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்குகிறார். ஆர்யா ஜோடியாக வனமகன் சாயிஷா நடிக்கிறார். பாலமுரளி இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு, ஜனவரியில் துவங்குகிறது.
படத்திற்கு கஜினிகாந்த் என்று பெயரிட்டுள்ளனர். நானி நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து வெற்றிபெற்ற பலே பலே மஹாடிவொய் படத்தின் ரீ-மேக் என கூறப்படுகிறது.