மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய சுக்ரன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன்பிறகு காதலில் விழுந்தேன் படத்தில் அவரது இசையில் உருவான நாக்குமுக்க பாடல் அவரை பிரபலப்படுத்தியது. பின்னர் விஜய்யின் வேட்டைக்காரன் படத்திற்கு இசையமைத்து அடுத்த லெவலுக்கு சென்றார் விஜய் ஆண்டனி. தொடர்ந்து நான், சலீம் படங்களுக்குப்பிறகு நடிகராகி விட்ட அவர், பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது அவர் நடித்துள்ள அண்ணாதுரை படம் வருகிற வெள்ளிக்கிழமை (டிசம்பர் 1) திரைக்கு வருகிறது. இந்தபடத்தில் நடிகர், இசையமைப்பாளர் மட்டுமின்றி எடிட்டராகவும் உருவெடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. இதையடுத்து அவர் இயக்குனர் அவதாரமும் விரைவில் எடுத்து விடுவார் என்றொரு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து விஜய் ஆண்டனி கூறுகையில், தொடர்ந்து நடிகர், இசையமைப்பாளர், எடிட்டராக மட்டுமே செயல்படுவேன். இயக்குனராக வேண்டும் என்ற ஆசை என்னிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.