ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கவர்ச்சி கன்னியாக வலம் வந்து ரசிகர்களை மச்சான்ஸ் என்று அழைத்து கிறங்க வைத்த நடிகை நமீதாவுக்கு நாளை(நவ., 24) காலை 5.30 மணிக்கு திருப்பதியில் திருமணம் நடைபெற இருக்கிறது. தனது காதலரும், தயாரிப்பாளரும், அறிமுக நடிகருமான வீரேந்திர சவுத்ரியை, நமீதா திருமணம் செய்கிறார்.
முன்னதாக நேற்று மாலை திருப்பதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மெகந்தி நிகழ்ச்சியும், திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. இதில் நமீதா மற்றும் வீரேந்திர சவுத்ரியின் பெற்றோர்கள், உறவினர்கள், நெருக்கமான நண்பர்கள் கலந்து கொண்டனர்.
நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்ட ரைசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருமணத்தை முடித்ததும், சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறார் நமீதா.