மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
யூ டியூப் ரசிகர்களுக்கு எரும சாணி குழு பற்றித் தெரியும். நாட்டு நடப்புகளை காமெடி வீடியோவாக்கி அலற விட்டுக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் இப்போது சினிமாவுக்கு வருகிறார்கள். இந்த குழுவில் உள்ளவர்கள் இணைந்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படத்தை உருவாக்குகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலின் புகழ்பெற்ற வாசகம் இது.
இந்தப் படத்தை கிளாப்போர்ட் நிறுவனத்தின் சார்பில் வி.சத்யமூர்த்தி தயாரிக்கிறார். எரும சாணி குழுவில் உள்ள விஜய், ஹரிஜா, விக்கி, கோபி, சுதாகர், ஷாரா அகஸ்டின் நடிக்கிறர்கள். ஜோஸ்வா ஜே.பெரோஸ் ஒளிப்பதிவு செய்கிறார், கவுசிக் ரவி இசை அமைக்கிறார். ரமேஷ் வெங்கட் இயக்குகிறார். படம் பற்றி தயாரிப்பாளர் வி.சத்யமூர்த்தி கூறியதாவது:
ஒரு யதார்த்தமான சந்திப்பில் பேசி முடிவெடுக்கப்பட்டது தான் இந்த ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது திரைப்படம். எங்கள் திரைப்படத்தில் பணியாற்றும் எல்லா கலைஞர்களின் மீதும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கின்றது. நிச்சயமாக இந்த படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கக்கூடிய திரைப்படமாக உருவெடுக்கும் என்பதை நான் நிச்சயமாக சொல்லுவேன். வருகின்ற டிசம்பர் மாதம் எங்கள் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாக இருக்கின்றது. 2018 ஆம் ஆண்டின் கோடை விருந்தாக எங்களின் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது திரைப்படம் இருக்கும்" என்கிறார் தயாரிப்பாளர் வி.சத்யமூர்த்தி.