ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
சென்னை -28, சரோஜா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி என பல படங்களை இயக்கியவர் வெங்கட்பிரபு. தற்போது பார்ட்டி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெய், மிர்ச்சி சிவா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, நிவேதா பெத்துராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆனால் வெங்கட்பிரபுவின் எல்லா படங்களிலுமே நடிக்கும் அவரது தம்பியான பிரேம்ஜி இந்த படத்தில் நடிக்கவில்லை. மாறாக, இசையமைப்பாளராகியிருக்கிறார்.
இதுபற்றி வெங்கட்பிரபு கூறுகையில், நான் இயக்கியுள்ள அனைத்து படங்களிலுமே பிரேம்ஜி நடித்திருக்கிறார். அந்த படங்களில் அவரது நடிப்பு பேசும்படியாகவும் இருந்தது. என்றாலும், சில ரசிகர்கள் பிரேம்ஜியை உங்கள் படங்களில் நடிக்க வைக்க வேண்டாம் என்று இணைய பக்கத்தில் வந்து திட்டுகிறார்கள். அதனால் தான் ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று இப்போது நான் இயக்கும் பார்ட்டி படத்தில் அவரை நடிக்க வைக்கவில்லை. மாறாக, இசையமைக்க வைத்திருக்கிறேன் என்கிறார் வெங்கட்பிரபு.