'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் வேலைக்காரன். பஹத் பாசில், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சினேகா முதலானோர் நடிக்கும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பே முடிந்துவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் இரண்டு பாடல்காட்சிகள் படமாக்கப்படாமலே இருந்தது.
இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டாலும், எடிட்டிங் இன்னமும் முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது.
குறிப்பிட்ட நாட்களுக்குளள் எடிட்டிங் முடிந்துவிட்டால் டப்பிங் மற்றும் ரீரெக்கார்டிங்கை தொடங்கி விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதெல்லாம் நினைத்தபடி நடந்துமுடிந்தால் வேலைக்காரன் படத்தை டிசம்பர் 22-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
ஒருவேளை பட பணிகளில் தொய்வு ஏற்பட்டால் ஜனவரியில் தான் வேலைக்காரன் படம் வெளியாகும். இந்த படத்தின் சென்னை விநியோக உரிமையை பிரபல எஸ்.பிஐ. சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.