மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய எச்.வினோத் தற்போது இயக்கியுள்ள படம் தீரன் அதிகாரம் ஒன்று. இந்த படம் தெலுங்கில் காக்கி என்ற பெயரில் வெளியாகிறது. நவம்பர் 17-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் டீசர், டிரைலர், பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் முதன்முறையாக கார்த்தியுடன் நடித்துள்ளார் ரகுல் பிரீத் சிங். அதோடு, முதலில் கார்த்தியின் காதலியாக வரும் அவர், பின்னர் அவரது மனைவியாகவும் நடித்திருக்கிறார். அந்த வகையில், அவர்கள் காதலிப்பதை விட, கணவன் மனைவியான பிறகு அவர்களுக்கான ரொமான்ஸ் காட்சிகளை அதிகமாக படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில், இந்த படத்தில் இல்லத்தரசியாக புரொமோஷன் பெற்றுள்ள ரகுல்பிரீத்சிங்கிற்கு சில செண்டிமென்ட் காட்சிகளும் நடித்து கண்கலங்க வைத்திருக்கிறார்.