மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பொதுவாக மெட்டுக்கு பாட்டு எழுதுவது தான் தற்போது வழக்கத்தில் உள்ளது. 1970கள் வரை பாட்டுக்கு மெட்டு அமைக்கும் முறை வழக்கத்தில் இருந்தது. தற்போது அபூர்வமாக பாட்டுக்கு மெட்டு அமைப்பதும் உண்டு.
அறிமுக இயக்குனர் தண்டபாணி இயக்கியுள்ள படம் 'குரு உச்சத்துல இருக்காரு' படத்திற்கு இசை அமைத்துள்ள தாஜ் நூர் ஒரு புதுமையை செய்துள்ளார். 'பெஸ்ட் மூவீஸ்' நிறுவனம் இந்த படத்தில் குரு ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார். மஜித் இயக்கிய 'பைசா' படத்தில் நடித்த ஆரா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இசை அமைப்பாளர் தாஜ்நூர் பேசும்போது ஒரு தகவல் சொன்னார். ''இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இந்த படத்தின் பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்புகளை படக்குழுவினர் முதலில் முடித்து விட்டார்கள். அதற்கு பிறகு அந்த காட்சிகளுக்கேற்றவாறு நான் இசை அமைக்க வேண்டியதாக இருந்தது. இது சவாலான பணி! இருந்தாலும் அதை ஏற்று சரியாக செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்'' என்றார்.