ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'பலே வெள்ளையத் தேவா'. காமெடி தனக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்ட அந்தப்படத்தை மக்கள் ரசிக்கவில்லை. பலே வெள்யைத்தேவா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது நடித்து வரும் கொடிவீரன் படம் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார் சசிகுமார்.
'குட்டிப்புலி', 'கொம்பன்' படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் சசிகுமார் தயாரித்து நடிக்கும் இப்படத்தில், மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா என மூன்று கதாநாயகிகள் நடித்திருக்கின்றனர். 'கொடிவீரன்' படத்தை தீபாவளி ரிலீசாக இம்மாதம் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
மெர்சல் படம் ஏகப்பட்ட தியேட்டர்களை பிடுங்கிக் கொண்டதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் நவம்பர் 3 ஆம் தேதி அன்று கொடி வீரன் ரிலீஸ் என்று சொல்லப்பட்டது. ஆனால் சென்சார்போர்டு உரிய நேரத்தில் சர்ட்டிபிகேட்டை வழங்காததினால் அந்த தேதியில் படத்தை வெளியிடமுடியாமல் போய்விட்டது.
இதற்கிடையில் நவம்பர் 10 நவம்பர் 17 தேதிகளில் ரிலீஸ் செய்ய வேறு பல படங்கள் முந்திக்கொண்டதால் 'கொடிவீரன்' படத்தை நவம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.