ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், விஷால் ஆகியோர் அரசியலுக்கு வர ஆர்வப்பட்டு, அதற்கான காரியங்களில் இறங்கி உள்ளனர். இவர்கள் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று, அவர்களைக் காட்டிலும், அவர்களது ரசிகர்களே அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இப்படி இந்த நால்வருக்கும் இருக்கும் ரசிகர்கள் ஆசைப்படுவது போல, நடிகர் அஜித் ரசிகர்களும், அவரும் தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்புகின்றனர். இதை, அஜித்திடமே சமீபத்தில் அவர்கள் வெளிப்படுத்த, அரசியலெல்லாம் என்னுடைய இயல்புக்கு ஒத்து வராது; அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது; இந்த விஷயத்தை யாரும் என்னை வற்புறுத்த வேண்டாம் என தெரிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, அஜித் ரசிகர்கள் சிலர் கூறியதாவது:
விஜய்யைக் காட்டிலும் கூடுதலாக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் அஜித். அவருக்கு இன்றைக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதற்காக, சினிமாவில் தாறுமாறாக நடித்து, பணம் பார்க்க வேண்டும் என்றெல்லாம் அவர் நினைப்பதில்லை.
நடிப்பை மட்டுமே தொழிலாக செய்து வருகிறார். படத் தயாரிப்பு, விநியோக உரிமை என்று உப வருமானம் பார்க்கும் காரியத்துக்கும் செல்ல மாட்டார்.
தான் உண்டு; தனது குடும்பம் உண்டு என்று வாழ்க்கை நடத்தும் அஜித், இல்லாதவர்களுக்கு உதவிட வேண்டும் என்றால், அனாதை ஆசிரமங்களுக்கு நேரடியாக சென்று உதவிடுவார். அதைக் கூட விளம்பரத்துக்காக பயன்படுத்த மாட்டார். விழாக்கள், நிகழ்ச்சிகள் என்று, தலைகாட்ட மாட்டார்.
இருப்பினும் அரசியலுக்கு வருமாறு அவரிடம் கேட்டோம். அதற்கு அவர், அரசியல் எனக்கு சரிபட்டு வராது; யாருக்கு போட்டியாகவும் எதையும் செய்ய மாட்டேன். என்று வெளிப்படையாக தெரிவித்து விட்டார். இதனால், அஜித்தை அரசியலுக்கு இழுக்கும் முயற்சி, துவக்கத்திலேயே தோல்வியில் முடிந்து விட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.