'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
விஜய்யின் மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான காட்சிக்கு தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
விஜய் நடிப்பில் தடைகள் பல கடந்து தீபாவளியான நேற்று ரிலீஸாகி இருக்கும் படம் மெர்சல். இப்படத்தில் மருத்துவம் தொடர்பான பல்வேறு விஷயங்களை சுட்டி காட்டியிருக்கிறார் விஜய். அதோடு ஜிஎஸ்டி., டிஜிட்டல் இந்தியா போன்றவைகள் குறித்தும் படத்தில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பா.ஜ. தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் நில வேம்பு குடிநீர் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்து தவறான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை நீக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடர்வோம். விஜய் அரசியலுக்கு வருவதற்காக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.