ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! |
விஜய் டி.வி. நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தீடீர் புகழைப் பெற்றவர் நடிகை ஓவியா. இன்றைய தேதிக்கு தமிழ் நாட்டின் செல்லக்குழந்தை ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்பட்ட அவரின் நேர்மை, அப்பாவித்தனம் அவருக்கு இந்த இடத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறது. தீபாவளி விளம்பரங்களில் அவரே முன்னணியில் இருக்கிறார். ஒரு ஜவுளி நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருக்க 2 கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருப்பதாக தகவல்.
இந்த நிலையில் அவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. எங்கேயும் எப்போதும், பொன்மாலைபொழுது, தீயா வேலை செய்யணும் குமாரு, நெடுஞ்சாலை, இவன் வேறமாதிரி உள்பட பல படங்களுக்கு இசை அமைத்த சி.சத்யா தயாரிக்கும் படத்தில் ஓவியா நடிக்கிறார். அவருக்கு ஜோடி யார் தெரியுமா, அதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கட்டிப்புடி வைத்தியம் மூலம் புகழ்பெற்ற பாடலாசிரியர் சினேகன். தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. சத்யாவே இசை அமைக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்த வருகிறது.
ஓவியா நடித்துள்ள ஓவியாவை விட்டா யாரு படம் வெளிவர வேண்டியது இருக்கிறது. சினேகன் கூத்து, மற்றும் ராஜராஜனின் போர்வாள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்போது ஓவியாவுடன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த தகவலை சத்யா வெளியிட்டிருக்கிறார்.