முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி |
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ஒரே இரவில் புகழின் உச்சிக்கு வந்திருப்பவர் ஷாலினி பாண்டே. முதல் படத்திலேயே 19 லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்து, ஆந்திர வாலாக்களை கதிகலங்க வைத்திருக்கிறார். ஆந்திராவின் வெற்றி களிப்போடு தமிழுக்கும் வருகிறார். அதே தெலுங்கில் 4 வருடங்களுக்கு முன்பு ஹிட்டான 100 பிரசன்ட் லவ் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்கிறார். நேற்று இந்தப் படத்தின் பூஜை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது. அதில் கலந்து கொண்ட ஷாலினி கூறியதாவது:
ஜபல்பூர்தான் சொந்த ஊர். கல்வி குடும்பம் எங்களுடையது. நிறைய படிக்கணும், ஸ்போர்ட்ஸ்ல பெரிய ஆளா வரணுங்றதுதான் என்னோட ஆசையாக இருந்தது. ஆனால் பிரண்ட்சுங்கதான் நீ அழகா இருக்க நாடகத்தில் ஏன் நடிக்க கூடாது என்றார்கள். அதையும் பார்த்து விடுவோம் என்று நாடகத்தில் நடித்தேன். நடிப்பு எனக்கு பிடிச்சிருந்தது. எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினேன்.
பிறகு டி.வி.நிகழ்ச்சிகள் பண்ணினேன். அப்பகூட நான் சினிமாவில் நடிப்பேன்னு நினைக்கல. நெட்டுல என்னோட போட்டோவை பார்த்துவிட்டுதான் சந்தீப் ரெட்டி சார் அர்ஜுன் ரெட்டியில் வாய்ப்பு கொடுத்தார். அந்த ஒரு படம் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். தமிழ் சினிமா எனக்கு ரொம்ப புதுசு. இப்பதான் தமிழ் படங்கள் பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். தமிழ் பாட்டும் கேட்க ஆரம்பிச்சிருக்கேன். தமிழ் கத்துக்க ஆர்வமா இருக்கிறேன் என்கிறார் ஷாலினி.