மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சூர்யா நடித்த சிங்கம்-3 படத்திற்கு பிறகு சங்கமித்ரா என்ற மெகா படத்தில் நடிக்கயிருந்தார் ஸ்ருதிஹாசன். அந்த படத்திற்காக சில வீர விளையாட்டுக்களை பயிற்சி எடுத்து வந்தார்.
ஆனால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென அந்த படத்தில் இருந்து வெளியேறினார் ஸ்ருதிஹாசன். அதையடுத்து தனது தந்தை கமல்ஹாசன் நடித்த சபாஷ் நாயுடு படத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு பதிப்பிலும் நடித்து வந்தார்.
ஆனால், அந்த படமும் தற்போது பாதியில் நிற்கிறது. அதோடு ஸ்ருதிஹாசன் நடித்து வந்த தெலுங்கு, இந்தி படங்களும் ரிலீசாகி விட்டது. இந்தநிலையில், தற்போது எந்த படத்திலும் ஸ்ருதிஹாசன் நடிப்பது போல் தகவல் இல்லை. ஒரு கன்னட படத்தில் கமிட்டாகியிருப்பதாக வெளியான தகவலையும் தற்போது அவர் மறுத்துள்ளார். ஆக, தற்போது நடிப்புக்கு ஸ்ருதிஹாசன் ஒரு சிறிய பிரேக் கொடுத்திருப்பது போலவே தெரிகிறது.