'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியான கிருஷ்ணா சில படங்களில் ஹீரோவாக நடித்தார். அவர் நடித்த படங்கள் அனைத்துமே தொடர்ந்து தோல்வியடைந்ததால் அவருக்கு ஹீரோ வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியாக அவர் நடித்த பண்டிகை படம் படு தோல்வியடைந்தது.
இந்நிலையில் இனி ஹீரோவாக தாக்குப்பிடிக்க முடியாது என்ற எண்ணத்தினாலோ என்னவோ கிடைக்கும் வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். இப்படி ஒரு முடிவுக்கு வந்த பிறகு சமீபத்தில் வெளியான 'நிபுணன்' படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது தனுஷ் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி-2 படத்திலும் நடிக்கி உள்ளார்.
கதாநாயகனாக நடித்துகொண்டே கதையில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்க முடிவு செய்த பிறகு, கிருஷ்ணாவை மற்ற இயக்குநர்களும் நடிக்க அழைக்கிறார்களாம். தற்போது ஹீரோவாக நடித்து வரும் படங்கள் வொர்க்அவுட் ஆகவில்லை என்றால், முழுநேர கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக திட்டமிட்டுள்ளாராம் கிருஷ்ணா.