மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகை திரிஷா ஒரு வகையில் மலையாளி. அதாவது அம்மா உமா தமிழ் நாட்டைச் சேர்ந்தவர், அப்பா கிருஷ்ணன் பாலக்காட்டு மலையாளி. த்ரிஷா பிறந்ததும் பாலக்காட்டில்தான். தற்போது த்ரிஷா மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
கேரள அரசும், யுனிசெப் நிறுவனமும் இணைந்து குழந்தைகளுக்கு தட்டம்மை நோய் தடுப்பூசி போட வலியுறுத்தும் விழிப்புணர்வு விளம்பரப் படம் ஒன்றை நேற்று வெளியிட்டது. இது அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இதில் நடிகை த்ரிஷா நடித்துள்ளார். அதில் அவர் மலையாளத்தில் பேசி பெண்களுக்கு குழந்தைகளுக்கு உரிய வயதில் தட்டம்மை தடுப்பூசி போடச் சொல்கிறார்.
த்ரிஷாவுக்கு தமிழே தடுமாறுமே மலையாளத்தில் எப்படி என்கிற உங்கள் சந்தேகம் சரிதான். தமிழ் சினிமாவில் அவருக்கு டப்பிங் குரல் கொடுக்கும் பாடகி சின்மயிதான் இந்த விழிப்புணர்வு படத்திற்கும் மலையாளத்தில் டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். த்ரிஷாவின் வேண்டுகோளும், சின்மயின் மலையாள உச்சரிப்பும் கேரளாவில் வாட்ஸ் ஆப் டிரண்டிங் ஆகியிருக்கிறது.