மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஆர்யா, ஜெயம் ரவியை வைத்து இயக்குவதாக இருந்த 'சங்கமித்ரா' படம் இப்போதைக்கு துவங்கப்பட முடியாத சூழலில் தான் உள்ளது. இதனால் 'கலகலப்பு' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி.
இந்த படத்தில் ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரெசா, மிர்ச்சி சிவா நடிக்க இருக்கிறார்கள். 'ஹிப் பாப் தமிழா' ஆதி இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். 'கலகலப்பு-2'வின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியுள்ளது.
காரைக்குடியில் நடைபெறும் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பை தொடர்ந்து, புனே, வாரணாசி, ஐதராபாத் ஆகிய ஊர்களிலும் நடக்கவிருக்கிறது. இந்த படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி.
12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே சுமார் 17 கோடிக்கு படத்தை பிசினஸ் செய்துவிட்டாராம் சுந்தர்.சி.
இப்படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை ஸ்ரீ தேணான்டாள் பிலிம்ஸ் வாங்கியிருப்பதாக தகவல்.