மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'அர்ஜுன் ரெட்டி'. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே கதாநாயகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் ரெட்டி இயக்கிய இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடிக்க இருப்பதாக முதலில் செய்திகள் வந்தன. அவரே தமிழ் ரீமேக் ரைட்ஸையும் வாங்கிவிட்டதாக சொல்லப்பட்டது.
அதன் பின்னர் சிம்பு அதில் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியானது. இந்நிலையில், 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதை நடிகர் விக்ரம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
மலையாளப் பட உலகை சேர்ந்த 'E4 Entertainment' என்ற பட நிறுவனம், 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ், மலையாளம் ரீ-மேக் உரிமையை வாங்கியுள்ளது.
துருவ்வை வைத்து இரண்டு மொழிகளிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
துருவ்வின் அம்மா அதாவது விக்ரமின் மனைவி ஷைலஜா கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் மலையாளத்திலும் மகனை காலூன்ற வைக்கவே அறிமுகப்படத்தை தமிழ் மலையாளத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.