விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கோலிசோடா படத்தை அடுத்து விஜய் மில்டன் இயக்கிய படம் 10 எண்றதுக்குள்ள. இந்த படத்தில் விக்ரம்-சமந்தா ஜோடி சேர்ந்து நடித்தனர். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த இந்த படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டது. இப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இந்த படத்தை தற்போது தெலுங்கில் டப் செய்து வெளியிடும் வேலைகள் நடக்கிறது.
அந்த வகையில், இந்த படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு 10 -என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு தேதிகளில் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அக்டோபர் மாதம் படத்தை வெளியிடப்போகிறார்களாம். சமீபகாலமாக விக்ரம் தெலுங்கு படங்களில் நடிக்கவில்லை என்றபோதும், தனது ஆரம்ப காலங்களில் நான்கு நேரடி தெலுங்கு படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.