தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் |
தமிழ் சினிமாவின் பிரபல கலை இயக்குனர் ஜி.கே. 200 படங்களுக்கு மேல் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இயற்பெயர் கோபி கிருஷ்ணா. ரஜினி நடித்த அருணாச்சலம் படத்திற்கு பிரமாண்ட செட் அமைத்ததற்காக சிறந்த கலை இயக்குனருக்கான மாநில அரசின் விருதினை பெற்றார். கலை இயக்குனராக இருந்தாலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இருதநோய் பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் பேராடியும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
மறைந்த ஜி.கேவுக்கு வயது 60. நாகேஸ்வரி என்ற மனைவியும், கிருஷ்ணா, ஹேமச்சந்திரா என்ற மகளும் உள்ளனர். ஜி.கேவின் உடல் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.