'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
த்ரிஷா முதன்முதலாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ள படம் தான் 'ஹே ஜூட்'. மலையாள திரையுலகின் இளம் முன்னணி ஹீரோவான நிவின்பாலி தான் படத்தின் நாயகனாக நடிக்கிறார். இதில் த்ரிஷா கிறிஸ்தவ பெண்ணாக நடிக்கிறாராம். இந்தப்படத்தை ஷ்யாம் பிரசாத் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே, நிவின்பாலி, பிருத்விராஜ் இருவரும் இணைந்து நடித்த 'இவிடே' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அழகான காதல் கதையாக இந்தப்படம் உருவாகிறது..
கோவாவை சுற்றியே இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது என்பதால் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சீரான இடைவெளியில் கோவாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. அப்படி சமீபத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள கோவாவுக்கு சென்ற த்ரிஷாவை அவர் வழக்கமாக தங்கும் ஹோட்டல் நிர்வாகம் இன்ப அதிர்ச்சி தரும் விதமாக வரவேற்றுள்ளது. த்ரிஷாவின் கொடி படம், கிளாப் போர்டு, சினிமா ரீல் என சில அம்சங்களை உள்ளடக்கி த்ரிஷாவுக்கென்றே ஒரு ஸ்பெஷல் கேக்கை தயார்செய்து த்ரிஷாவை வரவேற்றார்களாம். இதை தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் த்ரிஷா.