'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
அரியலூர் : நீட் விவகாரத்தில் போராடி, தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவிற்கு ஆதரவாக தமிழக முழுக்க பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் அனிதாவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அனிதா இறந்த அன்றே, நடிகர் ஜிவி பிரகாஷ் குமார், அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் நடிகர் விஜய், அனிதாவின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அனிதாவின் உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவரது தந்தைக்கு ஆறுதல் கூறினார். கூடவே அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும் வழங்கினார் விஜய்.