மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பழம் பெரும் தென்னிந்திய திரைப்பட நடிகை பெங்களூர் விஜய ராதா என்ற பி.வி.ராதா(69) இன்று பெங்களூருவில் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில்,
"எங்கள் நடிகர் சங்கம் உறுப்பினரான பி.வி.ராதா இன்று பெங்களூருவில் மரணமடைந்தார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம். 1964-ல் நவகோடி நாராயணா என்ற கன்னட திரைப்படத்தில் அறிமுகமாகி, குமாரி ராதா என்ற பெயரில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்பட 300 க்கும் அதிகமான படங்களிலும் நடித்து பிரபலமானவர். இறுதி நாள் நடிகர் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, சங்கம் செயல்படுகளை ஊக்குவித்து வந்தார்.
அவரது இழப்பு தென்னிந்திய திரைப்பட துறைக்கு மாபெரும் இழப்பாகும். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதோடு அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினரின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.