'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
3 வருடங்களுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற படம் கோலிசோடா. மிக குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்ற படம். இயக்கி, தயாரித்த விஜய் மில்டன் அதன் இரண்டாம் பாகத்தை தற்போது தயாரித்து, இயக்கி வருகிறார்.
முதல்பாகத்தில் மார்க்கெட் தாதாவுடன் மோதி தங்கள் அடையாளத்தை பெற்றுக் கொண்டவர்கள். இரண்டாம் பாகத்தில் எதையாவது சாதிக்க நினைக்கிறார்கள். இதற்காக அவர்கள் கால்பந்து விளையாட்டை தேர்வு செய்கிறார்கள். செல்லும் இடமெல்லாம் வெற்றி பெறுகிறார்கள். ஸ்போர்ட்ஸ் மேன் என்ற பெரிய அடையாளம் கிடைக்கிறது. மார்க்கெட் பசங்கள் இந்த அளவிற்கு வளர விடக்கூடாது என்று சிலர் செய்யும் சதிகளில் இருந்து மீண்டு. தங்களின் அடுத்த அடையாளத்தை எப்படி கைப்பற்றுகிறார்கள் என்பதுதான் கதை.
இதில் சமுத்திரகனி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவர்களை வழிநடத்தும் ஒரு ஆசான் கேரக்டரில் நடிக்கிறார். இதுவரை தனி கெட்அப் எதுவும் போடாமல் நடித்துவந்த சமுத்திரகனி இந்தப் படத்தில் நரைத்த தாடி மீசை, கண்ணாடி என முதிய தோற்றத்தில் நடிக்கிறார்.