மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விஜய் நடித்துள்ள மெர்சல், படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மாசோ என்ற பாடலை எழுதியிருக்கிறார் விவேக். ஆனால் அந்த பாடலை வழக்கம்போல இல்லாமல் ஆங்கிலத்தை தமிழ் மாதிரி பேசுவது போன்ற கோணத்தில் வார்த்தைகளை இணைத்து அந்த பாடலை எழுதியிருக்கிறார்.
அந்த பாடல் வரிகளை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் பாடலாசிரியர் விவேக். அதாவது, அவ தொட்டுட்டா என்பதை டச்சிட்டா என்று எழுதியிருக்கிறார். அதேபோல், அவ பேசிட்டா என்பதை ஸ்பீக்கிட்டா, தூங்கி என்பதை ஸ்லீப்பி என்றும், போட்டோ எடுப்பதை கிளிக்கா என்றும் ஆங்கிலத்தை தமிழ் மாதிரி எழுதியிருக்கிறார். இந்த பாடல் முழுக்க இப்படித்தான் வார்த்தைகள் இடம்பெற்றிருக்கிறது. அதனால் இந்த மெர்சல் படம் வெளியான பிறகு பெரும்பாலான இளவட்டங்கள் இப்படித்தான் ஆங்கிலத்தை பேசுவார்கள் என்று தெரிகிறது.