மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிரஷாந்த் - சினேகா நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியான படம் விரும்புகிறேன். இந்தப் படத்தில் தீயணைப்பு வீரராக நடித்திருந்தார் பிரசாந்த். கமர்ஷியலாக அந்தப்படம் வெற்றியடையவில்லை. இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு தீயணைப்பு வீரர்களை மையமாக வைத்து நெருப்புடா படம் எடுக்கப்பட்டுள்ளது.
தனது 'பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்' நிறுவனம் சார்பில் விக்ரம் பிரபு தயாரித்து, நடித்துள்ள படம் 'நெருப்புடா' படத்தை அறிமுக இயக்குனர் அசோக் குமார் இயக்கியுள்ளார். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். செப்டம்பர்-8 அன்று வெளியாகவிருக்கும் இந்த படம், தமிழ்நாடு தவிர்த்து, மலேசியாவில் மட்டும் 29 தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.
இதற்கு முன் விக்ரம் பிரபு நடித்த படங்கள் மலேசியாவிலும் வெளியாகியுள்ளன என்றாலும் ஒன்றிரண்டு தியேட்டர்களிலேயே வெளியாகியுள்ளன. ஆனால் இப்போது விக்ரம் பிரபுவின் முந்தைய படங்களை விட 'நெருப்புடா' படம் மலேஷியாவில் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகவிருப்பதை படக்குழு பெருமையாக கூறியுள்ளனர்.