மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாகுபலி பட நாயகன் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் புதிய படம் சாஹோ. சுஜீத் இயக்கும் இந்த படம் ரூ.150 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் தயாராகிறது. மேலும், பாகுபலி-2 ஹிந்தியிலும் வெற்றி பெற்றதால், இந்த படத்தை இந்தி சினிமாவையும் டார்க்கெட்டாக கொண்டு தயாரிக்கிறார்கள்.
அதன்காரணமாக, இந்த படத்தில் பிரபாசுடன் பாலிவுட் பிரபலங்களே அதிகமாக நடிக்கிறார்கள். அந்த வகையில், இந்த சாஹோ படத்தில் நாயகியாக ஹிந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்க, வில்லனாக நீல்நிதின் முகேஷ் நடிக்கிறார். அதேபோல் பாலிவுட்டின் பிரபல நடிகரான ஜாக்கி ஷெராப் மற்றும் மந்திரா பேடி, சங்கி பாண்டே உள்பட பலர் நடிக்கிறார்களாம். இவர்களில் மந்திரா பேடி இந்த படத்தில் நெகடீவ் ரோலில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.