முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி |
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குநர் கோகுலும் ஜுங்கா படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் படத்தின் ஹீரோயின் சாயிஷா நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தின் எழுபது சதவிகித படப்பிடிப்பும் பாரிஸில் நடைபெறவிருக்கிறது. விஜய்சேதுபதி நடித்த படங்களிலேயே அதிக செலவில் தயாராகும் படம் இதுதானாம். அதாவது 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் உருவாகவிருக்கிறது.
பெரிய பட்ஜெட் என்பதால் இந்த படத்தை விஜய்சேதுபதியே தயாரிக்கிறார். ஆரஞ்சு மிட்டாய் படத்தின் மூலம் தயாரிப்பாளரான விஜய்சேதுபதி, சங்குதேவன் என்ற படத்தை தயாரிப்பதாக இருந்தார். பின்னர், என்ன காரணத்தினாலோ சங்குதேவன் தயாரிப்பிலிருந்து பின் வாங்கி விட்டார் விஜய்சேதுபதி.
இப்போது ஜுங்கா படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்பாளராகி இருக்கிறார். காஷ்மோரா படத்தில் தோல்வியை சந்தித்த கோகுல் இந்தப் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டும் என்ற வேகத்தோடு ஜுங்கா பட வேலைகளை கவனித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.