மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் எப்போது ரிலீஸ் என்று இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. சூர்யா கடைசியாக நடித்த சி-3 படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே சரியான தேதியில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை ரிலீஸ் செய்து பாக்ஸ்ஆபிஸ் ஹிட்டாக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.
இதற்கிடையில், தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ஷூட்டிங்கில் ரசிகர்களால் மொபைல் போனில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. இப்படி பரவும் வீடியோ இயக்குநர் விக்னேஷ் சிவனை டென்ஷனாக்கி இருக்கிறது.
''தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தியேட்டரில் மட்டுமே கண்டு மகிழுங்கள். தெரியாமல் எடுக்கப்பட்டு வெளிவரும் வீடியோ க்ளிப்களைப் பார்த்து, அதனை ஷேர் செய்வதை தயவுசெய்து தவிருங்கள். இன்னும் படப்பிடிப்பு வேலைகள் கொஞ்சம் மீதமுள்ளன. அது முடிந்ததும், படம் சம்பந்தப்பட்ட வெளியீட்டு விஷயங்களை அறிவிக்கிறோம்!'' என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இப்படத்தின் கதை 90களில் நடைபெறுவதுபோல் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் அடிபடுகிறது.