விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
இன்றைக்கு யூடியூப்பில் கிரியேட்டிவான நிறைய வீடியோக்கள் வலம் வருகின்றன. திருவனந்தபுரத்தை சேர்ந்த அமன் எஸ்.டொமினிக் என்கிற பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் சமீபத்தில் வெளியான 'விக்ரம் வேதா' படத்தின் டிரைலரை தனது கிரியேட்டிவிட்டியை பயன்படுத்தி ரீமிக்ஸ் செய்து அதை தனது டுவிட்டர் பக்கம் மூலமாக அந்தப் படத்தில் நடித்த நடிகர் மாதவனுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை ஏதேச்சையாக பார்த்த மாதவன், அந்த சிறுவனின் கிரியேட்டிவிட்டியை பாராட்டியுள்ளார். இதுபற்றி சந்தோஷத்தில் திளைக்கும் அந்த மாணவன் அமன், இதுபோன்ற புதிய விஷயங்களில் ஈடுபட மாதவனின் பாராட்டு ஊக்கம் தருவதாக இருக்கிறது என கூறியுள்ளார். இந்த சிறுவன் 12 வயதாக இருந்தபோதே இவனது எடிட்டிங் திறமையை கண்டு ஆச்சர்யப்பட்ட அவனது தந்தை, அவனுக்கென்று தனியாக ஒரு எடிட் ஷூட்டே வைத்து கொடுத்தாராம்.