ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
கன்னட சினிமாவை பரபரப்பாக்கிய படம் "தண்டுபாலையா". கூலிக்காக கொலை செய்கிற, கொள்ளை அடிக்கிற கூட்டத்தை பற்றிய கதை. வன்முறை காட்சிகள் அதிகம் இடம்பெற்ற இந்தப் படம் கர்நாடகாவில் பரபரப்புடன் ஓடியது. பூஜா காந்தி அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பு கிளம்பினார்.
இப்போது அதன் இரண்டாம் பாகம் வெளிவந்திருக்கிறது. இதிலும் பூஜா காந்தி நடித்துள்ளார். ஆனால் அரை நிர்வாணமாக நடித்திருப்பது சஞ்சனா. இவர்கள் தவிர மகரந்த் தேஷ்பாண்டே, பிரகாஷ்ராஜ், ஆர்.ரவிசங்கர், ரவிகாளே உள்பட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜென்யா இசை அமைத்துள்ளார். வெங்கட் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கடந்த மாதம் 14-ம் தேதி கர்நாடகாவில் வெளியான இந்தப் படம் கடும் விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை ஓசன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தமிழில் வெளியிடுகிறது. கொடூரன் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.