மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கரகாட்டக்காரன், சென்னை 28 உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த குணச்சித்ர நடிகர் சண்முக சுந்தரம், சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது...
சண்முக சுந்தரம், 1963-ம் ஆண்டு ரத்த திலகம், கர்ணன் ஆகிய படங்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கல்லூரியில் பயிலும் காலத்திலேயே நடிப்பில் ஆர்வம் கொண்டு மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டு தன் கலை வாழ்க்கையை தொடங்கியவர். 1972-ம் ஆண்டு வாழையடி வாழை படத்தில் நடித்து திரைப்பட நடிகரானார். தொடர்ந்து இன்று வரை கரகாட்டக்காரன், கிழக்கு வாசல், நம்ம ஊரு ராசா, நண்பன், அச்சமின்றி உள்பட நூற்று கணக்கான படங்களில் நடித்து தனது இயல்பான நடிப்பாற்றலால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
அன்பானவன் அசறாதவன் அடங்காதவன் தான் கடைசியாக வெளிவந்த அவரது படம். மேலும் அண்ணாமலை, அரசி, செல்வி, வம்சம் ஆகிய சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். தனது கடினமான உழைப்பாலும் திறமையாலும் நற்பெயரும் புகழும் பெற்று விளங்கியவர் சண்முக சுந்தரம். அவரது மறைவு நாடக மற்றும் திரை உலகிற்கும், நடிகர் சமூகத்திற்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அன்னாரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினர் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்".
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.