மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பட்டதாரி படத்தில் நடித்தவர் அதிதி மேனன். இவர் தற்போது அமீர் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் சந்தனத்தேவன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். பீரியட் கதையில் உருவாகி வரும் இந்த படத்திற்காக அந்த காலகட்டத்து பெண்ணாக தனது கெட்டப்பை முழுமையாக மாற்றி நடிக்கிறார் அதிதி. இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் எனக்கொரு அங்கீகாரம் கிடைத்து விடும் என்கிறார் அவர்.
மேலும், பிரபுசாலமனின் கும்கி-2 படத்தில் நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது பற்றி அதிதிமேனனிடம் கேட்டபோது, கும்கி-2 படம் சம்பந்தமாக பிரபுசாலமன் அலுவலகம் சென்று வந்தேன். ஆனால் அந்த படத்தில் நான் நடிப்பது பற்றி இன்னும் உறுதியளிக்கவில்லை. அவர் சொன்ன பிறகுதான் அந்த படத்தில் நான் நடிக்கிறேனா? இல்லையா? என்பது தெரியவரும்.
அதோடு, ஆகஸ்ட் 20-ந்தேதிக்கு பிறகு மீண்டும் சந்தனத்தேவன் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். அந்த படத்தில் நடித்து முடித்த பிறகுதான் புதிய படங்களுக்கு கால்சீட் கொடுப்பேன். தற்போது எனது முழுகவனமும் தமிழ் சினிமா மீது தான் உள்ளது. அதனால் மலையாளத்தில் இருந்து பட வாய்ப்புகள் வந்தபோதும் இப்போதைக்கு வேண்டாம் என்று தவிர்த்து விட்டேன் என்கிறார்.