விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
'DNA' கூட்டணி என தனுஷ், அனிருத் கூட்டணியை இளம் ரசிகர்கள் கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை கொண்டாடினார்கள். இருவரும் இணைந்த படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் அவர்களின் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருந்தது.
அடங்காத யாரோ ஒருவரின் கண்பட்டுவிட்டதால் அந்தக் கூட்டணி பிரிந்தது. தனுஷ், மியூசிக் ஜீனியஸ் ஷான் ரோல்டனுடன் கூட்டணி அமைத்துவிட்டார். ஒரு கூட்டணி கைவிட்டாலும் வேறொரு கூட்டணி கைதூக்கிவிடும் என்பது சினிமாவின் நியதி. 'DNA' கூட்டணி பிரிந்தால் என்ன 'ANA' கூட்டணி பிரமாதமான கூட்டணியாக உருவாகிவிட்டது.
'வேதாளம்' படத்தில் அஜித், அனிருத் - ANA - கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் 'செம மாஸ்' என்றால், 'விவேகம்' படத்தில் மீண்டும் இணைந்துள்ள இந்தக் கூட்டணியின் பாடல்கள் 'செம இன்டர்நேஷனல் கிளாஸ்' என்று சொல்ல வைத்துள்ளன. இரண்டு படங்களின் பாடல்களுக்கும் மிகப் பெரும் வித்தியாசம். படத்துக்குப் படம் மாறுபட்டு இருந்தால்தான் அது ரசிகர்களைச் சென்றடையும் என்பதை இசையமைப்பாளர் அனிருத் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்.
இப்படத்தின் மூன்று பாடல்களான, 'சர்வைவா, தலை விடுதலை, காதலாட' ஆகிய பாடல்கள் ஏற்கெனவே வெளிவந்து ஒன்றுக்கொன்று வித்தியாசமான பாடல்களாக அமைந்து ரசிக்க வைத்து வருகின்றன. அவற்றில் 'சர்வைவா' பாடலின் ரீச்சே வேறு. 'சர்வைவா' பாடல் ராப் வகைப் பாடலாக அமைந்து இசையாலும் உடனே கவர்ந்திழுத்துவிட்டது.
'தலை விடுதலை' பாடல் அஜித்தின் ஹீரோயிசப் பாடலாக அமைந்தது. 'காதலாட,' கிளாசிக்கலான மெலடி காதல் பாடலாக அமைந்தது. இந்தப் பாடல்களை ரசிகர்கள் ஏற்கெனவே கொண்டாடி விட்டார்கள். நேற்று வெளியான இப்படத்தின் மற்ற பாடல்களும் அஜித் ரசிகர்களுக்கு 'வேதாளம்' பாடல்களை விடவும் வேறு ஒரு கொண்டாட்டத்தையும், ஈர்ப்பையும் கொடுத்துள்ளன.
ஒரு படத்திற்கு அதன் பாடல்கள்தான் மிகப் பெரிய விசிட்டிங் கார்டு. படத்தின் தரம் இப்படியிருக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும். 'விவேகம்' படத்தைப் பொறுத்தவரையில் நேற்று வெளியான பாடல்கள், படம் ஒரு இன்டர்நேஷனல் தமிழ்ப் படம் என்ற பார்வையைக் கொடுத்துவிட்டது.
நேற்று வெளியான மொத்த ஆல்பத்தின் மற்ற பாடல்களான, 'வெறியேற' பாடல் ஒரு தன்னம்பிக்கைப் பாடலாகவும், எதிரிகளை எச்சரிக்கும் ஒரு பாடலாகவும் அமைந்துள்ளது. 'காதலாட' படத்தின் மறுவடிவம் ராப் பாடல் வகையுடன் அமைந்து ரசிக்க வைத்துள்ளது. 'நெவர் எவர் கிவ் அப்' முழுமையான ஆங்கிலப் பாடல், படத்தில் இடம் பெறுமா என்பது தெரியவில்லை.
'ஏகே தீம் மியூசிக்' சாதாரணமாக அமைக்கப்பட்டு போல் இருக்கிறது. 'மங்காத்தா, பில்லா' தீம் மியூசிக்கை விடவும் அதிரடியும், ஸ்டைலும் இல்லை. ஒரு வேளை படத்தில் அஜித் நடிப்புடன் பார்க்கும் போது நன்றாக இருக்க வாய்ப்புள்ளது.
தீம் மியுசிக் உட்பட 7 பாடல்களிலும் பாடியவர்களின் பெயர்களில் அனைத்துப் பாடல்களிலும் அனிருத் பெயர் இடம் பெற்றிருக்கிறது. ஓரிரு பாடல்களையாவது மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்திருக்கலாம்.
அஜித் படத்தில் அனைத்துப் பாடல்களையும் பாடினால் அஜித் ரசிகர்கள் அவரைத் 'தலை' மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் என்று நினைத்து விட்டாரோ என்னமோ ?.