மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் தயாரான படம் பாகுபலி. இந்த படம் உலக அளவில் இந்திய படங்களின் வியாபார சந்தையை விரிவுபடுத்தியது. இப்போது இந்த சாதனையை ரஜினியின் 2.O முறியடிக்குமா என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே, தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் பட்ஜெட் பெரும்பாலும 100 கோடியை கடந்து நிற்கிறது.
அந்தவகையில், தற்போது அஜித் நடித்துள்ள விவேகம் படம் 130 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகியிருக்கிறது. இதுவரை அஜித் நடித்த படங்களில் இதுதான் மெகா பட்ஜெட் படமாக கூறப்படுகிறது.
அதேபோல் விஜய் நடித்துள்ள மெர்சல் படமும் மெகா பட்ஜட்டில் தான் தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு ஆரம்பத்தில் ரூ.120 கோடி பட்ஜெட் போட்டு படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் என்பதால் செலவு அதிகரித்து விட்டதாம். அதனால் ஏற்கனவே திட்டமிட்டதை விட பட்ஜெட் எகிறி இருப்பதாக கூறப்படுகிறது.