'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
விக்ராந்த், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் இணைந்து நடித்துள்ள 'அறம் செய்து பழகு' சுசீந்திரன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் பணிகளை முடித்த உடனேயே, அதாவது அறம் செய்து பழகு படம் வெளியாவதற்கு முன்பாகவே தனது அடுத்த படத்தின் வேலைகளைத் தொடங்கினார் சுசீந்திரன். தற்போது ஏறக்குறைய 60 சதவிகித படப்பிடிப்புகளை முடித்து விட்டார்!
தற்போது இயக்கி வரும் புதிய படத்திலும் பெரும்பாலும் புதுமுகங்களே நடிக்கின்றனராம். 'ஆதலால் காதல் செய்வீர்' படம் போல உருவாகும் இந்த படத்தில் தெரிந்த முகம் என்றால் சூரி ஒருவர் தான்.
கல்லூரி மாணவர்களை சுற்றி நடக்கும் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு ஒரு பெண்ணின் பெயரை தலைப்பாக சூட்ட உள்ளார் சுசீந்திரன். இந்தமாதம் இறுதியில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது.