விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மகாநதி என தெலுங்கிலும், நடிகையர் திலகம் என தமிழிலும் தயாரித்து வருகிறார்கள். நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், நடிகை சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமந்தா பத்திரிகையாளராக நடிக்கிறார். சாவித்ரியின் காதல் கணவர், நடிகர் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார்.
ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகரான துல்கர் எப்படி பொருத்தமாக இருப்பார் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. துல்கர் சல்மான் பிறந்த நாளை முன்னிட்டு படக் குழுவினர் துல்கர் சல்மானின் ஜெமினி கணேசன் தோற்ற போஸ்டரை வெளியிட்டார்கள்.
அவ்வளவு ஆச்சரியம், அப்படியே ஜெமினி கணேசன் தோற்றத்திற்கு துல்கர் பொருத்தமாக இருந்தார். புரொஃபைல் புகைப்படமாக இருந்தாலும் ஜெமினிகணேசனின் ஹேர்ஸ்டைல், மீசை ஆகியவற்றை அப்படியே வடிவமைத்திருக்கிறார்கள். அந்தக் காலப் புகைப்பட ஸ்டைலில் போஸ்டர் வெளியிட்டிருப்பதும் கவர்ந்துள்ளது.
ஜெமினி கணேசன் தோற்றப் போஸ்டரைப் பார்த்து துல்கர் சல்மானும் அவருடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். “மகாநதி குழுவிலிருந்து அழகான ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டார்கள்,” என இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.