மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாகுபலி, பாகுபலி-2 ஆகிய இரண்டு படங்களிலும் நாயகியாக நடித்தவர் அனுஷ்கா. இதில் பாகுபலி-2வில் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த படத்தை அடுத்து பாக்மதி படத்தில் நடிக்க தயாராகி விட்ட அனுஷ்கா தற்போது அப்படத்தை முடித்து விட்டவர் வேறு சில படங்களிலும் கமிட்டாகிவிட்டார்.
இந்த நேரத்தில், பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கும் சாஹோ என்ற படத்தில் அனுஷ்கா நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அந்த படத்தில் அனுஷ்கா நடிக்கவில்லை என்று தற்போது அப்படக்குழு செய்தி வெளியிட்டிருக்கிறது. மேலும், சாஹோ படத்தில் நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால் சில தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க கமிட்டாகிவிட்டதால் அவரால் கால்சீட் தர முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அதையடுத்து இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிக்கும் பரிட்சயமான சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கயிருப்பதாகவும் கூறுகிறார்கள்.