'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
தமிழில் அரசியலை மையப்படுத்தி வெளியாகும் படங்கள் ரொம்பவே அரிதாகிவிட்டன. அப்படியே படம் எடுத்தாலும், ஆளுங்கட்சியை பகைத்துக் கொள்ளாமல் மேம்போக்காக மட்டுமே அவர்களை பற்றி விமர்சித்துவிட்டு போய்விடுவார்கள். ஆனால் ராணா டகுபதி, தற்போது ஹீரோவாக நடித்துள்ள 'நேனே ராஜூ நேனே மந்திரி' படத்தில் சூடு பறக்கும் அரசியல் வசனங்கள் இருக்கும் என்பது படத்தின் டீசரை பார்க்கும்போதே தெரிகிறது.
ஆனால் தெலுங்கு அரசியல் பற்றியல்ல... தமிழக அரசியல் பற்றி... இந்தப்படத்தில் டீசரில், ராணாவை பார்த்து, நான் சி.எம் என்பதை மறந்துவிடாதே என்கிறது முதல்வர் கேரக்டர். அதற்கு ராணா 'ஒரு நூறு எம்.எல்.ஏக்களை கொண்டுபோய் ரெஸ்ஸார்ட்டுல உட்கார வச்சா சாயந்திரத்துக்குள்ள நானும் ஆவேன் சி.எம்” என கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் கூத்தை நேரடியாகவே விமர்சிக்கிறார்.
இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயமாக ராணா-காஜல் அகர்வால் ரொமான்ஸ் மாண்டேஜ் காட்சிகளில் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' என எம்.ஜி.ஆர் பாடலை ஒலிக்க விட்டிருப்பதுதான்.