மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்களுக்கு அந்தப் படத்தை இயக்கியவர், நடித்தவர்கள் ஆகியோரது திரையுலக நண்பர்கள்தான் வாழ்த்துகளைத் தெரிவிப்பார்கள். சிலரது வாழ்த்துகள் அந்தப் படத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவிப்பது சாதாரண விஷயம்தான். ஆனால், ஒரு தமிழ்ப் படம் வெளியானதற்கு ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் வாழ்த்து தெரிவிப்பது சாதாரணமானதல்ல.
ஆஸ்திரேலியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன், 'மீசைய முறுக்கு' படத்தை இயக்கி, நடித்துள்ள ஹிப்ஹாப் தமிழாவிற்கு படத்தின் வெளியீட்டு தினத்தன்று தன்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.
“இந்த 'மீசைய முறுக்கு' பையன் ஹிப்ஹாப் தமிழாவைச் சந்தித்தது ஞாபகம் இருக்கிறது. நீங்கள் கிளர்ச்சி மிக்கவர், வாழ்த்துகள் நண்பா” என மேத்யூ ஹைடன் ஹிப்ஹாப் தமிழாவை வாழ்த்தியுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்து “மிக்க நன்றி நண்பா, உங்கள் வரை படம் வந்ததடைந்துள்ளது மிக்க மகிழ்ச்சி” என ஹிப்ஹாப் தமிழா கூறியுள்ளார்.
ஒரு தமிழ்ப் பட வெளியீட்டிற்கு வெளிநாட்டு கிரிக்கெட் வீரர் வாழ்த்து தெரிவிப்பது இதுவே முதல் முறை. 'மீசைய முறுக்கு' படம் இளைஞர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.