மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ரஜினியின் சமீபத்திய படங்களில் தென்னிந்திய நடிகைகளுடன் விட இந்திய நடிகைகளே ஜோடியாக நடித்து வருகிறார்கள். 'எந்திரன்' படத்தில் ஐஸ்வர்யா ராய், 'கோச்சடையான்' படத்தில் தீபிகா படுகோனே, 'லிங்கா' படத்தில் சோனாக்ஷி சின்ஹா, 'கபாலி' படத்தில் ராதிகா ஆப்தே. அந்த வரிசையில் 'காலா' படத்தில் ஹுமா குரேஷி.
'காலா' படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. அதன் பின் சிறிய இடைவெளி விட்டு மீண்டும் மும்பையில் நடத்தினார்கள். இப்போது சென்னையில் ஆரம்பமாகி நடந்து வருகிறது. இதற்காக மிகப் பெரிய அரங்கம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். அங்கு ஒரு மாத காலத்திற்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதில் ரஜினிகாந்த் - ஹுமா குரேஷி சம்பந்தப்பட்ட பல காட்சிகள் படமாக உள்ளதாகத் தெரிகிறது. ஹுமா குரேஷி, சென்னையில் உள்ள மிகப் பெரும் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து தினமும் படப்பிடிப்பிற்குச் சென்று வருகிறார்.
படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இருந்தாலும் படத்தின் நாயகியாக ஹுமா குரேஷி ஒருவர் மட்டுமே நடிக்கிறார். ஆனால், இவர் வயதான ரஜினி கதாபாத்திரத்திற்கு ஜோடி இல்லை என்று மட்டும் தெரிகிறது. 'கபாலி' படம் போலவே 'காலா' படத்திலும் ரஜினிகாந்த் இளமையான தோற்றத்திலும் நடிக்கிறார், அந்த ரஜினிக்குத்தான் ஹுமா குரேஷி ஜோடியாக நடிக்கிறார் என்கிறார்கள்.