மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ரஜினி நடித்து வரும் படம் காலா. அவர் நடித்து முடித்துள்ள 2.ஓ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நேரத்தில் காலா படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார் ரஜினி. முந்தைய படமான கபாலியை இயக்கிய பா.ரஞ்சித் இதனையும் இயக்குகிறார். ரஜினியுடன் ஹூயூமா குரேஷி, சமுத்திரகனி, ஈஸ்வரி ராவ், நானா படேகர், சுகன்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஜி.முரளி ஒளிப்பதிவு செய்கிறார்.
தமிழ்நாட்டில் இருந்து மும்பை சென்று அங்கு தாதாவாக வளர்ந்த ஒருவரின் கதை. இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில், மும்பை தாராவி செட்டில் நடந்து வருகிறது. படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடிக்கு மேல் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது படத்தின் பட்ஜெட் ரூ.160 கோடி என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
காலா படத்தின் தலைப்பும், கதையும் என்னுடையது என்று காரம்பாக்கத்தைச் சேர்ந்த கே.ராஜசேகரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் இயக்குனர் பா.ரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ், மற்றும் ரஜினி சார்பில் தாக்கல் செய்யப்பட்டு பதில் மனுவில் காலா படம் 160 கோடி செலவில் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.