முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி |
ஒரு படத்தை உருவாக்குவதில் அதிகப்படியான பட்ஜெட் என்பது நட்சத்திரங்கள் தங்கும் ஹோட்டலுக்கும், அவர்களுடைய ஓய்வு வண்டியான கேரவன் வசதிக்கும் செலவாகும். இப்போதெல்லாம் ஓரளவு வளர்ந்த நடிகர், நடிகைகளுக்குக் கூட கேரவன் வசதி செய்து கொடுத்து வருகிறார்கள்.
ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கும் செலவை விட, அவர்களுடைய ஒரு நாள் கேரவன் செலவு அதிகமாக இருக்கும். இது இல்லாமல் மதிய உணவு, மற்ற உணவுகள் அனைத்துமே நட்சத்திர ஹோட்டலில் இருந்துதான் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். கூட, அப்பா, அம்மா, உதவியாளர்கள் வந்தால் அந்த செலவு வேறு தனி.
ஒரு சில நட்சத்திரங்கள் தான் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்காமல் எதை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்வார்கள். நடிகர், இயக்குனர் சசிகுமார் அவரே தயாரிப்பாளராகவும் இருப்பதால் அவருக்கென தனி வசதியை செய்து கொள்கிறார். அவர் வெளிப்புறப் படப்பிடிப்புக்குச் செல்லும் போதெல்லாம் அவருடன் பிரத்யேகமாக ஒரு மொபைல் கிச்சனுடன்தான் செல்வாராம்.
பிரிட்ஸ், கேஸ் அடுப்பு மற்ற சமையல் உபகரணங்கள் அனைத்துமே அதில் உள்ளதாம். அவருக்குத் தேவையானதை அவரோ அல்லது அவரது உதவியாளர்களே சமைத்துக் கொடுத்து விடுவார்களாம். டீ முதல் பிரியாணி வரை அந்த மொபைல் கிச்சனில் சமைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.
ஹோட்டல் உணவு ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு இந்த மொபைல் கிச்சன் சரியான வசதிதான்.