மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு 'மகாநதி' என்ற பெயரில் தெலுங்கிலும், 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் தமிழிலும் படமாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகை சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நடிகை சாவித்ரி இயல்பாகவே கொஞ்சம் குண்டாக இருப்பார். அதுதான் அவருக்கு இன்னும் அழகாக இருக்கும்.
அவரது கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையும் அது போன்ற உடல்வாகுடன் இருந்தால் தான் நன்றாக இருக்கும். அதனால், நடிகை கீர்த்தி சுரேஷ் படத்திற்காக குண்டாக மாறுகிறார் என சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால், கீர்த்தி சுரேஷ் குண்டாகவில்லை, மேக்கப் மூலமே குண்டாக மாற்றம் செய்து நடிக்கிறேன் என சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார்.
'புரொஸ்தடிக்' மேக்கப் எனப்படும் மேக்கப் மூலம் அவரை குண்டாக மாற்றி படத்தில் நடிக்க வைக்கிறார்கள் எனச் சொல்லியிருக்கிறார். 'அவ்வை சண்முகி' படத்தில் இப்படிப்பட்ட மேக்கப் மூலமே கமல்ஹாசன் பெண்ணாக நடித்தார். கீர்த்தி சுரேஷும் அதே வழியைத்தான் பின்பற்றுகிறாராம். படத்திற்காக அவர் குண்டாக மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டார் என்றும் ஒரு பக்கம் செய்திகள் வந்தன.
'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக குண்டாக மாறிய அனுஷ்கா அதன் பின் ஒல்லியாக மாற முயற்சித்தும் இன்று வரை முடியவில்லை. 'பாகுபலி 2' படத்தில் அவரை ஒல்லியாக காட்டுவதற்காக சில பல கோடிகளை செலவழித்தார்கள். அதெல்லாம் கீர்த்தி சுரேஷுக்கு ஞாபகம் வந்து போகுமில்லையா, அப்புறம் எப்படி அவர் குண்டாக மாறுவார் ?.