மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இந்தியத் திரையுலகில் இதற்கு முன் இப்படி ஒரு சாதனை நிகழ்ந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு 'பாகுபலி 2' படத்தின் டிரைலர் வெளியான அந்த நிமிடத்திலிருந்து அடுத்தடுத்து பல புதிய சாதனைகளைப் படைத்தது. அந்த சாதனைகளில் மேலும் ஒரு மணிமகுடமாக 'பாகுபலி 2' படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளின் டிரைலர்கள் யு டியுபில் மொத்தமாக 15 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளன.
'பாகுபலி 2' தெலுங்கு டிரைலர் இதுவரை 5 கோடியே 59 லட்சத்திற்கும் கூடுதலான பார்வைகளைப் பெற்றுள்ளது. ஆனால், ஹிந்தியில் டப்பிங் ஆன இந்தப் படத்தின் டிரைலர் தெலுங்கை விட 2 கோடி அதிகம் பார்வைகளைப் பெற்று 7 கோடியே 10 லட்சத்திற்கும் கூடுதலான பார்வைகளைப் பெற்றுள்ளது. தமிழ் டிரைலர் 2 கோடியே 11 லட்சத்திற்குக் கூடுதலாகவும், மலையாளம் டிரைலர் 42 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளது. இவை யு டியுபில் பெற்ற பார்வைகளின் எண்ணிக்கை மட்டுமே. இன்னும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் பார்வைகளைக் கணக்கிட்டால் அது இன்னும் கூடுதலாக வரும்.
'பாகுபலி 2' படத்தின் டிரைலர் சாதனையை அடுத்து எந்தப் படம் முறியடிக்கப் போகிறது என்பதுதான் திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் கேள்வி. அந்த ஒரு வாய்ப்பு ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள '2.0' படத்திற்கு மட்டுமே இருப்பதாக பலரும் சொல்லி வருகிறார்கள். அதற்கு நாம் இன்னும் சில மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.